அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 15 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தபோது வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது, கடந்த மே 25-ல் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார், உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தது. அப்போது அதிகாரிகளை தாக்கியதாக 15 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, ஜாமீனில் விடுவிக்கக்கோரி, 15 பேரும் கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதையடுத்து, கைதான 15 பேருக்கு ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக கைதான 15 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் மதுரை கிளை.