தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் உலக அளவில் அதிகரித்து வந்தாலும் தமிழகத்திலும் கொரானாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உயிரிழந்தவர்களை விட குணமாகியவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். இதை தொடர்ந்து தமிழகத்தில் தான் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.
இதற்கு அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், தமிழகத்தில் இதுவரை 2,08,784 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளன, கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி மிகவும் தவறானது.
மருத்துவர்கள் இறப்பு குறித்த தகவல்களை இந்திய மருத்துவர் சங்கமே மறுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை வெளியிபவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தவறான தகவல்களை வெளியிட்டு மருத்துவர்களின் மன உறுதியை சீர் குலைக்க வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறி உள்ளார்.
சென்னை : நேற்று தலைநகர் சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுமார் 7,8 இடங்களில் நடந்த…
சென்னை : தமிழக அரசியலில் மிக பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையிலேயே அவசரமாக…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமாகிய நடிகர் மனோஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அண்மையில், அவர்க்கு…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். அன்மையில் அவர்க்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்தது.…