சுகாதாரத்துறையில் பின்னோக்கி செல்லும் தமிழகம்! ஆய்வில் தகவல் !
மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்கள்பட்டியலில் தமிழகமானது பின்னோக்கி சென்று உள்ளது தெரிகிறது. கடந்த ஆண்டு சுகாதாரத்துறையில் தமிழ்நாடு இந்திய அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு ஒன்பதாம் இடத்தைப் பெற்றுள்ளது.
மாநிலத்தின் சுகாதாரம், மருத்துவ வசதிகள் அடிப்படையில் இந்தஆய்வானது நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடந்த ஆய்வின் முடிவில் கேரளா மாநிலம் தொடர்ந்து முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தை ஆந்திர மாநிலமும் , மகாராஷ்டிரா மாநிலம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆய்வில் ஆந்திரா பிரதேசம் ஏழாம் இடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.