திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுபட்டியில் ஆரோக்கியராஜ் , மேரி தம்பதியின் குழந்தை சுர்ஜித் .இவர் மாலை 5.40 மணி அளவில் வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது அங்கு இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.
சுர்ஜித் 26 அடி ஆழத்தில் சிக்கி கொண்ட நிலையில் சுர்ஜித்திற்கு சுவாசிக்க சிலிண்டர்கள் மூலமாக தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது.ஆழ்துளை கிணற்றில் உள்ள சுர்ஜித்தை மணிகண்டன் என்பவர் பிரத்தேயகமாக தயாரித்த கருவி மூலம் மீட்க நீண்ட நேரமாக போராடிய நிலையில் தற்போது பக்கவாட்டில் 5 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மீண்டும் பள்ளம் தோண்டும் பணி தொடங்கி உள்ளது. ஏற்கனவே 15 அடி தோண்டி பள்ளம் இருந்த நிலையில் பாறைகள் இருந்ததால் தோண்டும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது.
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித்தை கயிறு மற்றும் கருவிகள் மூலம் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால் தற்போது மீண்டும் பள்ளம் தோண்டும் பணி தொடங்கி உள்ளது.சுர்ஜித் 8 மணி நேரமாக ஆழ்துளை கிணற்றில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…