குழந்தை சுஜித் மீட்கப்பட வேண்டும், நானும் காத்திருக்கிறேன் -மு.க.ஸ்டாலின்
குழந்தை சுஜித் மீட்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியார்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜித் மீண்டுவர வேண்டும் என்று அனைவரையும் போல நானும் காத்திருக்கிறேன் .குழந்தையை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருவதை பார்க்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.