ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதற்காக தமிழகம் முழுவதும் பல தரப்பு மக்களும் பிராத்தனை செய்து வந்தனர். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 3 நாட்களுக்கு மேலாக கடந்தும் போராடி வந்தனர்.
சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ரிக் எந்திரம் மூலம் துளையிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.இரவு, பகலாக 80 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வந்தது.இதனையடுத்து பணிகள் 2 மணி அளவில் நிறுத்தப்பட்டது. அப்போது வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.ஆழ்துளை கிணற்றில் இருந்து நேற்று இரவு 10.30 மணியில் இருந்தே உடல் சிதைந்து துர்நாற்றம் வீசியது . 80 மணி நேரமாக நடைபெற்ற முயற்சி தோல்வி அடைந்ததாகவும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் வழிகாட்டுதலின்படி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.சில மணி நேரங்களில் சிறுவனின் இறப்பு குறித்து முறையான அறிவிப்பு என்றும் தெரிவித்தார்.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…