#BREAKING : குழந்தை சுஜித் உயிரிழப்பு ! வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

Default Image

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதற்காக தமிழகம் முழுவதும் பல தரப்பு மக்களும் பிராத்தனை செய்து வந்தனர். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 3 நாட்களுக்கு மேலாக கடந்தும் போராடி வந்தனர்.
சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ரிக் எந்திரம் மூலம் துளையிடும் பணிகள்  தீவிரமாக நடைபெற்றது.இரவு, பகலாக 80 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வந்தது.இதனையடுத்து பணிகள் 2 மணி அளவில் நிறுத்தப்பட்டது. அப்போது  வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.ஆழ்துளை கிணற்றில் இருந்து நேற்று  இரவு 10.30 மணியில் இருந்தே உடல் சிதைந்து துர்நாற்றம் வீசியது . 80 மணி  நேரமாக நடைபெற்ற முயற்சி தோல்வி அடைந்ததாகவும்  தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் வழிகாட்டுதலின்படி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.சில மணி நேரங்களில் சிறுவனின் இறப்பு குறித்து முறையான அறிவிப்பு என்றும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்