பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தை மதுரை சாலையில் மீட்பு!

பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தை மதுரை சாலையில் மீட்க்கப்பட்டுள்ளது.
முந்தய காலத்தில் தான் பெண் குழந்தைகள் என்றால் கள்ளிப்பால் வைத்துக்கொல்வதும், தூக்கி வீசுவதும் நடந்து வந்தது. தற்போதைய காலங்களில் பலருக்கு குழந்தை பாக்கியமே கிடைப்பதில்லை. அதிலும் பிறக்கக்கூடிய குழந்தை என்ன குழந்தையாக இருந்தால் என்ன என்று வளர்க்க கூடிய மனப்பான்மைதான் அதிகரித்திருக்கிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் தற்போதும் பெண் குழந்தைகள் என்றால் அபச குணமாகவும், வேண்டா வெறுப்பாகவும் நினைக்கக்கூடிய பெற்றோர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சாலை ஓரத்தில் பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர் குழந்தையின் அழுகுரல் கேட்டு, உடனடியாக சென்று பார்த்த பொழுது குழந்தை இருந்ததை கண்டுள்ளார். இதனை அடுத்து அக்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மேலும் பிறந்து சில நிமிடங்களே ஆன இந்த பெண் குழந்தையை சாலையில் வீசி சென்ற மனித மிருகம் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025