குழந்தை தடுப்பூசியால் இறக்கவில்லை – சுகாதாரத்துறை விளக்கம்..!
கோவையில் பச்சிளம் குழந்தை தடுப்பூசி போட்டதால் உயிரிழக்கவில்லை என சுகாதாரத்துறை தரப்பின் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று கோவையில் ஒரு முகாமில் 14 குழந்தைக்களுக்கு 3 மூன்று தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதில் ஒரு குழந்தை நேற்று மதியம் தூங்கி கொண்டிருக்கும்போது மயங்கியதால் அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவர்கள் குழந்தை இறந்ததாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, அந்த குழந்தையின் பெற்றோர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் தடுப்பூசி போட்டால் தான் தங்கள் குழந்தை இறந்ததாக புகார் தெரிவித்தனர். பின்னர், தடுப்பூசி போட்டுக்கொண்ட 13 குழந்தைகள் நலமாக உள்ளதாக இந்த ஒரு குழந்தை மட்டும் இறந்ததாகவும் இதுகுறித்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் பின்னர் தெரிய வரும் என சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்ந்து இன்று காலை குழந்தைக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. உயிரிழந்த குழந்தை நிமோனியா காய்ச்சலால் தான் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.