மருத்துவமனையில் டாக்டர் இல்லாத சம்பவம்.. செவிலியர் பார்த்த பிரசவத்தால் இறந்த குழந்தை!

Published by
Surya

சென்னை, பூந்தமல்லி அடுத்த குமனஞ்சாவடி, கண்டோன்ட்மென்ட் பகுதியை சேர்ந்தவர், தமீம் அன்சாரி. இவருக்கு நஸ்ரின் என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், நேற்று மதியம் பிரசவவலியால் துடித்துள்ளார். இவருக்கு பூந்தமல்லியில் உள்ள தாய்-சேய் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அப்பொழுது அங்கு பிரசவம் பார்க்கும் டாக்டர் பணியில் இல்லாதால், அங்குள்ள செவிலியர் ஒருவர் நஸ்ரினுக்கு பிரசவம் பார்த்து வந்தார். அப்பொழுது அவர் நஸ்ரினுக்கு பெண் குழைந்தை பிறந்துள்ளதாகவும், ஆனால் அது பிறக்கும்போதே இறந்துவிட்டதாக கூறிவந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனையடுத்து, அவர்கள் களைந்து சென்றனர்.

மேலும் நஸ்ரீனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மேல்சிகிச்சைக்காக அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தசம்பவம் குறித்து தமீம் குடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த குழந்தையில் உடலை பிரேத பரிசோதனை செய்யவுள்ளனர்.

Published by
Surya

Recent Posts

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இந்திய மகளிர் அணி! 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அசத்தல்!

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இந்திய மகளிர் அணி! 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அசத்தல்!

நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி  3 டி0 போட்டிகள், 3…

16 minutes ago

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து! 5 பேர் உடல் கருகி பலி!

ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…

53 minutes ago

Live : வானிலை நிலவரம் முதல்…ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு வரை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

1 hour ago

மருத்துவக்கழிவு விவகாரம் : எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என பழனிசாமி துடிக்கிறார்! – தங்கம் தென்னரசு பதிலடி!

சென்னை : கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மருத்துவ கழிவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில்,…

2 hours ago

இன்று 10 மணி வரை இந்த 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

2 hours ago

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு!

டெல்லி : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  நேற்று  நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட…

3 hours ago