மருத்துவமனையில் டாக்டர் இல்லாத சம்பவம்.. செவிலியர் பார்த்த பிரசவத்தால் இறந்த குழந்தை!
சென்னை, பூந்தமல்லி அடுத்த குமனஞ்சாவடி, கண்டோன்ட்மென்ட் பகுதியை சேர்ந்தவர், தமீம் அன்சாரி. இவருக்கு நஸ்ரின் என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், நேற்று மதியம் பிரசவவலியால் துடித்துள்ளார். இவருக்கு பூந்தமல்லியில் உள்ள தாய்-சேய் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அப்பொழுது அங்கு பிரசவம் பார்க்கும் டாக்டர் பணியில் இல்லாதால், அங்குள்ள செவிலியர் ஒருவர் நஸ்ரினுக்கு பிரசவம் பார்த்து வந்தார். அப்பொழுது அவர் நஸ்ரினுக்கு பெண் குழைந்தை பிறந்துள்ளதாகவும், ஆனால் அது பிறக்கும்போதே இறந்துவிட்டதாக கூறிவந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனையடுத்து, அவர்கள் களைந்து சென்றனர்.
மேலும் நஸ்ரீனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மேல்சிகிச்சைக்காக அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தசம்பவம் குறித்து தமீம் குடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த குழந்தையில் உடலை பிரேத பரிசோதனை செய்யவுள்ளனர்.