மண்ணெண்ணெய் ஊற்றி ஒரு வயது குழந்தையை கொளுத்திய தாய்!அதிரவைக்கும் பின்னனி
தனது ஒரு வயது குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றிக்கொழுத்தி விட்டு உடன் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஆனது சென்னை ராயப்பேட்டையில் உள்ள பைலட் லேன் பகுதியில் நடந்து உள்ளது.அந்த பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் மொபைல் ஷோரூம் ஊழியராக பணி செய்து வருகிறார்.இவருடைய மனைவி லதா(27) இவர்களுக்கு ஒரு வயது நிக்ஷிதாஎன்ற குழந்தை உள்ளது மேலும் சத்யநாராயணன் தனது தாய் ஆகியோரோடு வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரண்டாவதாக லதா கருவுற்றிருந்ததாக கூறப்படும் நிலையில் அவருக்கு திடீரென்று ரத்தபோக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது.இதனால் போரூரில் உள்ள SRMC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர்டைய 2 வது கரு கலைந்தாகவும் இதனை அடுத்து லதா ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று அவர் வீடு திரும்பி உள்ளார்.
கரு கலைந்ததில் கடும் மன உளைச்சலில் லதா இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காலை கணவர் சத்யநாராயணன் பணிக்குச் சென்று விடவே அத்தை அருகே உள்ள கடைக்கு சென்று உள்ளார். இந்த சமயத்தில் மதியம் 1 மணிக்கு வீட்டின் கதவை தாழிட்டுக்கொண்டலதா, வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தன் மீதும் த்னது ஒரு வயது குழந்தை மீதும் ஊற்றி பற்றவைத்துக் கொண்டார்.
சத்யநாராயணன் வீட்டிலிருந்து கரும் புகையோடு அலறல் சத்தம் அதிகமாக வரவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியாகி நின்றனர்.தீக்காயத்தில் லதா உயிரற்ற நிலையில் கீழே கிடந்துள்ளார். உயிருக்கு போராடிய படி தீக்காயங்களுடன் இரு வயது பச்சிழம் குழந்தையை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். ஆனால் குழந்தைக்கு 80% தீக்காயங்கள் ஏற்பட்டதால் பரிதாபமாக குழந்தையும் உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரு வயது கைக்குழந்தையோடு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆனது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.