தஞ்சை அரசு மருத்துவமனையிலிருந்து கட்டைப்பையில் வைத்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த 24 வயதுடைய குணசேகரன் எனும் கட்டிட தொழிலாளியின் மனைவி தான் ராஜலட்சுமி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், ராஜலட்சுமி கர்ப்பிணியாக இருந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணி ராஜலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 4 ஆம் தேதி தஞ்சையில் உள்ள ராசா மிராசுதார் என்னும் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 5 ஆம் தேதி காலை பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ராஜலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பகுதியிலுள்ள வார்டில் ஒரு பெண் தனது உறவினரை பிரசவத்திற்கு அனுமதித்து இருந்ததாக கூறி ராஜலட்சுமியிடம் பழகி வந்துள்ளார். மேலும் ராஜலட்சுமிக்கு உதவுவது போல நடித்துள்ளார். இதனையடுத்து, நேற்று இந்த பெண்மணி குழந்தையை கடத்தி சென்றுவிட்டார். இதனை அறிந்த ராஜலட்சுமி பதற்றமடைந்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் ராஜலட்சுமிக்கு உதவியது போல நடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி தான் குழந்தையை பையில் வைத்து கடத்தி சென்றதை கண்டறிந்தனர். இதனையடுத்து குழந்தையை மீட்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், கடத்தப்பட்ட பெண் குழந்தை பட்டுக்கோட்டையில் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…