குடிபோதையில் இருந்த தந்தை தன் குழந்தை தொடர்ந்து அழுததால் ஆத்திரத்தில் 8 மாதபெண் குழந்தையை விற்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவர்.இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். குடிபழக்கத்துக்கு அடிமையான இவர் இரண்டாவது மனைவி பணிக்கு செல்வதால் தன் 8 மாத குழந்தையை ராஜதுரையே பராமரித்து வந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மதுபோதையோடு குழந்தையுடன் திருப்பூரில் இருந்து நெல்லைக்கு செல்லக்கூடிய பேருந்தில் ராஜதுரை சென்று உள்ளார். குடிபோதையில் தள்ளாடியவாரே பேருந்தில் குழ்ந்தை கொண்டு ஏறியதை கண்டுகொண்ட பேருந்து நடத்துடனர் குடிப் போதையில் இருந்த ராஜதுரையை திருமங்கலத்தில் இறக்கி விட்டார்.
இதற்கிடையில் குழந்தை தொடர்ந்து அழுதது பசிக்காவோ இல்லை வேறு எந்த காரணத்திற்காக அழுதது என்று எண்ணக்கூடிய நிலையில் கூட இல்லை ராஜதுரை.வீ என்று கத்தி அழுத குழந்தையை சமாளிக்க முடியாமல், சாலையில் நின்று குழந்தை வேணுமா… என்று குழந்தையை கூவி கூவி விற்பனை செய்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த திருமங்கலம் காவல் துறையினர், ராஜதுரையிடம் இருந்து அழுது கொண்டிருந்த குழந்தையை மீட்டு, அவருடைய இரண்டாவது மனைவியிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் ராஜதுரையை கடுமையாக எச்சரித்து அனுப்பி உள்ள்னர்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…