நாளை பாபர் மசூதி இடிப்பு நாள் – தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்!
நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்.
நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், டிசம்பர் 6-ஆம் தேதி நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் தீவிர சோதனை ஈடுபட்டுள்ளனர். கோவையில் 4,000 காவலர்கள் நாளை கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இதுபோன்று தமிழகத்தில் தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நாடு முழுவதுமே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.