பி. இ., பி.டெக்., பி. ஆர்க்., மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு வெளிமாநில மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.!
பி. இ., பி. டெக்., பி. ஆர்க்., மற்றும் எம்சிஏ படிப்புகளின் சேர விரும்பும் வெளி மாநில மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பி. இ.,பி. டெக்., பி. ஆர்க்., எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு நடைபெற்று வந்தது. இந்த படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு நாளையுடன் முடிவடைய இருந்தது.
இந்த நிலையில் தற்போது பி. இ., பி. டெக்., பி. ஆர்க்., மற்றும் எம்சிஏ படிப்புகளின் சேர விரும்பும் வெளி மாநில மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பி. இ., பி. டெக்., பி. ஆர்க்., மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு வெளிமாநில மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.!#AnnaUniversity #Engineering pic.twitter.com/wG3FJmgGKx
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 2, 2020