பி.இ. அரியர் தேர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களுடன் ஆலோசனை!
முதலமைச்சர் முக ஸ்டாலின், உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடன் ஆலோசனை.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள், பி.இ. அரியர் தேர்வு முறை குளறுபடி மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், உயர்கல்வி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், பாரதியார், பாரதிதாசன், அன்னை தெரசா, திருவள்ளுவர் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.