தயவு செய்து மகாபாரதத்தை திரும்பவும் படியுங்கள்-ரஜினிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள்

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும் , அர்ஜூனனும் போன்றவர்கள்.இதில் யார் கிருஷ்ணன் ?யார் அர்ஜுனன் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று பேசினார்.
பலகோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்கள் எப்படி கிருஷ்ணரும், அர்ஜூனருமாக இருக்க முடியும். அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களே, தயவு செய்து மகாபாரதத்தை திரும்பவும் படியுங்கள். திரும்பவும் சரியாகப் படியுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். pic.twitter.com/rmV91jZmx3
— KS_Alagiri (@KS_Alagiri) August 12, 2019
நடிகர் ரஜினிகாந்தின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .அவர் கூறுகையில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை வரவேற்பதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .பலகோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்கள் எப்படி கிருஷ்ணரும், அர்ஜூனருமாக இருக்க முடியும். ரஜினிகாந்த் அவர்களே, தயவு செய்து மகாபாரதத்தை திரும்பவும் படியுங்கள். திரும்பவும் சரியாகப் படியுங்கள் என கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.