ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷின் பேச்சு ஆபத்தான பேச்சு.
கடந்த 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 37 பேர் உட்பட நாடு முழுவதும் 350-கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியதால், தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றுமாறு கோரியுள்ளனர்.
தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்றும், இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து வெளியேறலாம் என கூறிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜாவுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், தமிழா வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த வேல்முருகன் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என பேசிய ஆயுஷ் அமைச்சக செயலரை மாற்ற வேண்டும் என்றும், ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷின் பேச்சு ஆபத்தான பேச்சு, வேண்டாத பேச்சு என தெரிவித்துள்ளார்.
சென்னை : அம்மா என அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று. மறைந்து விட்டாலும்,…
சென்னை : அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில், டோமலபெண்டா…
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…