ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷின் பேச்சு ஆபத்தான பேச்சு – வேல்முருகன்

Default Image

ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷின் பேச்சு ஆபத்தான பேச்சு.

கடந்த 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 37 பேர் உட்பட நாடு முழுவதும் 350-கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியதால், தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றுமாறு கோரியுள்ளனர்.

தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்றும், இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில்  இருந்து வெளியேறலாம்  என கூறிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜாவுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், தமிழா வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த வேல்முருகன் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என பேசிய ஆயுஷ் அமைச்சக செயலரை மாற்ற வேண்டும் என்றும், ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷின் பேச்சு ஆபத்தான பேச்சு, வேண்டாத பேச்சு என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Volodymyr Zelenskyy
virat kohli centuries
MudhalvarMarundhagam
INDvPAK 2025
Pakistan vs India 2025