ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் விபச்சாரம்.தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்த முக்கிய பிரமுகர்கள்.
கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் களத்தில் இறங்கிய காவல்துறையினர்.
கரூர் மாவட்டத்தில் செங்குந்தநகரம் என்ற பகுதி உள்ளது.இப்பகுதியில் அதிகளவு டெக்ஸ் நிறுவனங்கள் செயல்படுகின்றன.இதனால் அப்பகுதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வெளியூர் வர்த்தகர்கள், தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் ஒரு மையம் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்திற்கு அடிக்கடி கார்களில் முக்கிய பிரமுகர்கள் விஐபிகள் வந்து சென்றவாறு இருந்துள்ளனர்.
ஆயுர்வேத சிகிச்சை அடிக்கடி செய்ய வேண்டியது இல்லையே, ஏன் இவர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் காவல்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இதன் காரணமாக காவல்துறையினர் அந்த ஆயுர்வேத மையத்திற்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது அங்கிருந்த சில பெண்கள் காவல்துறையினரை கண்டதும் அரைகுறை ஆடையுடன் தப்பு ஓடியுள்ளனர்.
இந்த மையத்தை நடத்தி வந்த தர்மபுரியை சேர்ந்த ரமேஷ்குமார் ,ஈசநத்தம் சின்ன அழகு ஆகியோரும் தலைமறைவாகியுள்ளனர்.இந்நிலையில் அந்த மையத்தில் ஒரு பகுதியில் பதுங்கி இருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவரிடம் நடத்திய விசாரணையில் ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் விபசாரம் நடந்து வந்ததாகவும், இதற்காக பல முக்கிய புள்ளிகள் அங்கு அடிக்கடி சென்று உல்லாசம் அனுபவித்ததாகவும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தப்பி ஓடிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றன.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…