தமிழகம் முழுவதும் இன்று கோலாகலகமாக கொண்டாடப்படும் ஆயுத பூஜை.! 

Ayutha Pooja 2023

இன்று தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை விழா கோலாலகமாக கொண்டாடப்பட உள்ளது. ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகள்,நிறுவனங்களில் ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை காரணமாக நேற்று முன்தினமே ஆயுத பூஜை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஆயுத பூஜை பெரும்பாலான இடங்களில், வீடுகளில் கொண்டாடப்பட உள்ளது. ஆயுத பூஜை என்பது நவராத்திரி விழாவின் 9வது நாள் விழாவாகும். இந்த நாளில் சரஸ்வதி தேவியை வழிபட்டு அருள் பெற பூஜைகள் செய்யப்படுகிறது.

கல்வி அறிவு பெருக புத்தகங்களை கொண்டும், தொழில்வளம் பெருக தாங்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள், எந்திரங்களை சுத்தம் செய்து பூஜை செய்வதும் வழக்கம். நவராத்திரி 9 நாளும் கொண்டாடாவிட்டாலும், இன்று சரஸ்வதி பூஜை மற்றும் நாளை விஜயதசமி என இரு தினங்கள் அம்மனை வழிபாட்டாலே நவராத்திரியின் முழு பலன் கிடைக்கும்.

இன்று எந்த நேரத்திலும் ஆயுத பூஜை வழிபாட்டை நடத்தலாம். இருந்தும் மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்வது நல்ல பலனை தரும். அவல் , பொரி, தேங்காய், பூ , பழம் என பூஜை பொருட்கள் வைத்து இந்த பூஜையை மேற்கொள்ள வேண்டும். வேலைக்கான ஆயுதங்கள், இயந்திரங்கள், வாகனங்களை சுத்தம் செய்து அதற்கு சந்தனம், குங்குமமிட்டு பூஜை செய்ய வேண்டும்.

இன்று சரஸ்வதி பூஜை என்பதால் பூ, காய்கறிகள், பழங்கள் விலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. தொடர் விடுமுறை என்பதால், வெளியூரில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதனால் சென்னை போன்ற பெருநகர பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்