ஆயுதபூஜை விடுமுறை – சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 8000 பேருந்துகள் இயக்கம்..!

இன்று மற்றும் நாளை ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, தமிழக அரசு சார்பில் கடந்த 20-ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,265 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கோவை, திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இந்த விடுமுறை நாட்களில், பயணிகள் அதிகமாக பயணிப்பார்கள் என்பதால், அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் தவறாமல் அவரவர் பணிக்கு வந்து பணி செய்ய வேண்டும் என்றும், கூடாது என்றும் தமிழக போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
இந்த நிலையில், ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள் மூலம் 4.80 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டதாகவும், கடந்த 3 நாட்களில் 8,003 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வரும் புதன்கிழமை வரை பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஆயுத பூஜை விடுமுறைக்காக சென்னையில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ள நிலையில், விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப 8000 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், இந்த பேருந்துகள் இன்று முதல் புதன்கிழமை வரை இயக்கப்படும் என்றும், போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024