அயோத்தியா மண்டப வழக்கு – உயர்நீதிமன்றம் உத்தரவு
அயோத்தியா மண்டப நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை எடுத்த உத்தரவு ரத்து.
சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அறநிலையத்துறையின் உத்தரவை உறுதி செய்த தனி நீதிபதி உத்தரவும் ரத்து செய்யப்பட்டது. கோயிலை நிர்வகிக்க அறநிலையத்துறை அதிகாரியை நிமியத்த உத்தரவும் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அனைத்து தரப்பு விளக்கத்தையும் கேட்டபின் சட்டத்திற்கு உட்பட்டு புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ஸ்ரீராம் சமாஜம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சங்கங்களின் கீழ் பதிவு செய்த ஸ்ரீராம் சமாஜை கோயில் என்ற வரையரைக்குள் கொண்டு வர முடியாது என்றும் சிலைகளை வைத்து பக்தர்களை பூஜிக்க வைத்து தட்சணை பெறுவதை அறநிலையத்துறை நிரூபிக்கவில்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், ஸ்ரீராம் சமாஜுக்கு எதிரான புகார் குறித்து புதிதாக விசாரணையை தொடங்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.