அயோத்தி இறுதி தீர்ப்பு..! முத்துபேட்டை தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!
அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை 10 .30 மணிக்கு வெளியிடப்படும் என உச்சநீதிமன்றம் கூறியது.இதை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இறுதி தீர்ப்பு வழங்குவதால் பல மாநிலங்களில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது .