#BREAKING : அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை .!
சென்னை அயனாவரத்தில் இருக்கும் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத் திறனாளி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் அதே குடியிருப்பில் வேலை செய்த 17 பேரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதையெடுத்து பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் அனைவரையும் சிறையில் அடைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து.
17 பேரில் பாபு என்பவர் சிறையில் இறந்ததால் , குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் தோட்டக்காரர் குணசேகரன் தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என கூறப்பட்டு இருந்தது.இந்நிலையில் சென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பழனி ,அபிஷாக் , சுரேஷ் மற்றும் ரவிக்குமார் ஆகிய 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் , 9 பேருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் , ஒருவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டையும் நீதிபதி மஞ்சுளா தீர்ப்பளித்தார்.