அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி கொடூர பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
சென்னையைச் சிறுமி மாற்றித்திறனாளி இந்த பிஞ்சை அதே பகுதியை சேர்ந்த பாதுகாவலர்கள் என்று கூறப்படுகிற செக்யூரிட்டிகள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததது.இதன் பேரில் 17 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. குற்றம்சாட்டப்பட்ட இந்த 17 பேரும் செவ்வாயன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப் பட்டது.
17 பேரில் 14 பேருக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை.ஆகவே அவர்களுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.மற்ற 3 பேருக்கும் சொந்த வழக்கறிஞர்கள் ஆஜராகினர். குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 13-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை சமூக ஆர்வலர்களும், பெண்கள் அமைப்பும்,மக்களும் உற்று நோக்கி வருகின்றனர்.
DINASUVADU
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…