மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கிராம சபை தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் இன்று மாலை நடைப்பெறுகிறது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்குவதற்காக, கிராமசபை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியன்று (15-08-2021) கிராமசபைக் கூட்டத்தை நடத்த வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் மனு கொடுக்கும் நிகழ்வை 02-08-2021 அன்று நாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மனுவின் நகல் மாவட்ட நிர்வாகிகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். இம்மனுவை 02-08-2021 (திங்கட்கிழமை) அன்று காலை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டுகிறேன்.
மேலும், 31-07-2021 (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு கிராம சபை விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடல் கூட்டம் (Zoom Meeting) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நமது கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும்.
இக்கூட்டத்தில் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள், விளக்கங்களை sscom@maiam.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும் உள்ளாட்சி வல்லுனர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று உங்களின் கேள்விகளுக்கு விடையளிப்பார்கள்.
குறிப்பு:
கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு கீழ்க்கண்ட “கிராம சபை” பயிற்சி வீடியோக்களைப் பார்த்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…