‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்!

Published by
Edison

‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தானை கமாண்டிங் ஆஃபிசர் அசோக் ராய் தொடங்கி வைத்தார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கோவையில் (ஜூன் 5) நடைபெற்றது.ஐ.என்.எஸ் அக்ரானியின் கமாண்டிங் ஆஃபிசர் காமோடர் அசோக் ராய் அவர்கள் கொடியசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.இதில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.வ.உ.சி பூங்கா அருகில் உள்ள ஆர்.கே. ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஓட்டம் சுமார் 5 கி.மீ பயணத்திற்கு பிறகு மீண்டும் அங்கேயே நிறைவு பெற்றது.

marathon

இது தொடர்பாக,அதில் பங்கேற்ற தன்னார்வலர்கள் கூறுகையில், “உலகளவில் மண்ணின் வளம் மிக வேகமாக அழிந்து வருகிறது. ற்போது இருக்கும் மண் வளத்தை கொண்டு அடுத்த 45 முதல் 60 ஆண்டுகள் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என ஐ.நா அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.மேலும், 2045-ம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 900 கோடியை தாண்டிவிடும்;ஆனால், உணவு உற்பத்தி 40 சதவீதம் குறைந்துவிடும் என ஐ.நாவின் ஆய்வு கூறுகிறது.இதனால், உலகில் உணவு பஞ்சம் ஏற்பட்டு,மக்கள் அதிகளவில் இடம்பெயறுவார்கள், உள்நாட்டு போர்கள் மூளும் வாய்ப்பும் உள்ளது.மேலும், மண் வளம் இழப்பதால் நாம் உண்ணும் உணவின் சத்தும் குறைந்து வருகிறது.

எனவே,மண் வளம் இழப்பதை தடுக்கவும்,இழந்த வளத்தை மீட்டெடுக்கவும் அரசாங்கங்கள் சட்டங்கள் இயற்ற வலியுறுத்தி ‘மண் காப்போம்’ என்ற சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கத்தை சத்குரு தொடங்கியுள்ளார்.இதற்காக அவர் லண்டன் முதல் தமிழ்நாடு வரை 100 நாட்களில் 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இவ்வியக்கத்திற்கு இதுவரை 74 நாடுகளும், ஐ.நாவின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன” என தெரிவித்தனர்.

சுமார் 20 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள்’

இதுதவிர,சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 3, 4 மற்றும் 5 ஆகிய 3 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் விவசாய நிலங்களில் 2 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் மேற்கொண்டது.அதன்படி,கோவை மற்றும் திருப்பூரில் 63 ஏக்கரில் சுமார் 20 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்தனர்.

சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக,தேக்கு,செம்மரம், சந்தனம்,மகோகனி,வேங்கை,மலை வேம்பு போன்ற பண மதிப்புமிக்க மரங்கள் நடப்படுகின்றன.காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் விவசாய நிலங்களின் மண் மற்றும் நீரின் தரத்தை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற மர வகைகளை பரிந்துரை செய்தனர்.

வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார், திரு.நெல் ஜெயராமன், திரு.மரம் தங்கசாமி ஆகியோரின் நினைவு மற்றும் பிறந்த நாட்களில் இதேபோல், லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

4 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

6 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

7 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

7 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

8 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

8 hours ago