கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு.! மாலை சிற்றுண்டி ஏற்பாடு.! திராவிடர் கழகம் நூதன விழிப்புணர்வு.!
இன்று சூரிய கிரகணம் நடைபெறும் சமயத்தில் உணவு உண்ணக்கூடாது எனும் இந்து சமய நம்பிக்கைக்கு எதிராக அந்த சமயம் உணவு உண்ணும் ஏற்பாட்டை திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ளனர்.
பூமி – நிலவு – சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது . அப்படியான சூரிய கிரகணம் இன்று மாலை நடைபெற உள்ளது. தமிழகத்தில் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மாலை 5.13 முதல் 5.44 மணி வரையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இன்று சூரிய கிரகணம் என்பதால் பெரும்பாலான இந்து கோவிகள் நடை அடைக்கப்பட்டன.
மேலும் கிரகண சமயத்தில் சாப்பிட கூடாது. குறிப்பாக கர்பிணி பெண்கள் வெளியில் வர கூடாது அது நல்லதல்ல எனும் நம்பிக்கை இந்து சமயத்தில் உண்டு. இதனை குறிப்பிட்டு திராவிடர் கழகத்தின் சார்பாக கிரகண நேரத்தில் சாப்பிடும் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் கர்ப்பிணி பெண்களும் பங்கேற்க உள்ளனர். என திராவிடர் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.