தமிழ் மொழியில் கேட்க தொடங்கிய இருமல் சத்தத்துடன் கூடிய விழிப்புணர்வு பிரச்சாரம்
கொரோனோ வைரஸ் உலக நாடுகளுக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறியுள்ளது .இதனால் உலக சுகாதார மைப்பு இதனை உலக தொற்றுநோயாக அறிவித்தது.இதுவரைக்கும் 1,40,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 5000 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .
இந்த கொரோனோ வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் அதிகபட்சமாக கேரளாவில் 22 பேர் .
மத்திய அரசு கொரோனோ வைரஸை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்தியாவில் நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நேற்று தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு . தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலம் தீவிரமான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முதற்கட்டமாக எந்தஒரு நெட்வொர்க்க்கிற்கும் நாம் கால் செய்யும்பொழுது இருமல் சத்தத்துடன் கூடிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேட்டுக்கும் வகையில்பிரச்சாரம் செய்து வந்தனர் .
இவ்விரண்டு மொழிகள் தெரியாதோருக்கு இது சிரமம் என்பதால் அந்ததந்த மாநில மொழிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று குரலெழுந்தது .இந்நிலையில் தமிழ் மொழியில் கொரோனோ வைரஸிலிருந்து எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் கேட்க தொடங்கியுள்ளது.
தினச்சுவடு இதை பற்றி ஆராய்ந்ததில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கால் செய்யும்பொழுது மட்டும் இது கேட்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .