தமிழக முன்னால் முதல்வர் செல்வி.ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதியை ‘மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்’-ஆக அனுசரிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்நிலையில், அந்த அறிவிப்பிற்கிணங்க, நேற்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல்புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தை முன்னேற்றத்திற்க்கு இந்த ஆண்டிற்கான மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது,
இந்த ஆண்டுக்கான இந்த விருது, கடலூர் மாவட்டம் மாலுமியர்பேட்டையை சேர்ந்த 9 வயது ச. பவதாரணி என்ற சிறுமிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். அந்த சிறுமிக்கு மாநில அரசின் விருதின் 1 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டது. இந்த சிறுமி போஷன் அபியான் திட்டம், நெகிழி பயன்பாட்டை தவிர்த்தல், வாக்களிக்க மக்களை ஊக்குவித்தல், கண்தானம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு விழிப்புணர்வை மேற்க்கொண்டதால் இந்த சிறுமிக்கு இந்த விருது வழங்கப்பட்டுக்கது.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…
வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…
பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2…
உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கரம் மசாலாவை எப்படி தயாரிப்பது என்றும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இச்செய்தி குறிப்பில்…
சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த "விடுதலை 2" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை…
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…