தொடர்ந்து 5-வது முறையாக விருது -அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

புதுடில்லியில் நடைபெற்ற 10-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழா நடைபெற்றது.இந்த விழாவில் உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் பெற்றதற்கான விருது உள்ளிட்ட 3 விருதுகள் வழங்கப்பட்டது.இந்த விருதினை மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இணையமைச்சர் அஷ்வினி குமார் சவுபே ஆகியோர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினார்.
இதன் பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தொடர்ந்து 5வது முறையாக இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மத்திய அரசிடமிருந்து இந்த விருது கிடைத்திருக்கிறது.
5-வது முறையாக கிடைத்திருப்பது மிகப்பெரிய பெருமை. அதோடு மட்டுமல்லாமல் உடல் உறுப்பு தானம் அறுவை சிகிச்சையில் மிக சிறப்பாக செய்யக்கூடிய மருத்துவமனை சென்னை அரசு ராஜீவ்காந்தி .மருத்துவமனை என்ற அடிப்படையில் கூடுதலாக இன்னொரு விருதும் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு அனைத்து அரசு மருத்துவ மனைகளுக்கும் அனுமதி வழங்கி அவர்களுக்கும் அந்த பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025