தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. பின்னர் ஆவின் பால் சப்ளை செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆவின் பால் லாரிகளை இயக்குவதற்கான, ஒப்பந்தம், கடந்த 2018ம் ஆண்டுடன் முடிவடைந்ததை அடுத்து, ஒப்பந்தத்தை அரசு நீட்டிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் சத்துணவு டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய கிறிஸ்டி நிறுவனத்துக்கு முழு ஒப்பந்ததையும் வழங்கப்போவதாக தகவல் வெளியானது.
இதனை கண்டித்து தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் அதிகாரிகளுடன் ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எடுக்கவில்லை. இதனால் நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாக சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி நேற்றிரவு தெரிவித்தார். வெளி மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யும் 300 டேங்கர் லாரிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் ஆவின் நிர்வாக தரப்பில் புதிய ஒப்பந்த நடவடிக்கைகளை கைவிடவில்லை என்றும், நிர்வாகத்துக்கு சொந்தமாக 53 டேங்கர் லாரிகள் இருக்கின்றன என்றும், அதனை வைத்து நிலைமையை சமாளிப்போம் என்று தெரிவிக்கின்றனர்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…