ஆவின் பால் விலை ரூ.3 குறைப்பு – இன்று முதல் புதிய விலைப்பட்டியல் !!

இன்று முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைந்து புதிய விலைப் பட்டியலில் பால் விற்பனை செய்யப்படும்.
தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட உடனே, 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அரசாணைகள் பிறப்பித்தார். அதில் முக்கியமான ஒன்றான பொதுமக்கள் நலன் கருதி, ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படுகிறது என்றும் இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அரசாணைக்கு ஏற்ப பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் நேரடியாக 16ம் தேதி முதல் ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைந்து புதிய விலைப் பட்டியலில் பால் விற்பனை செய்யப்படும்.
சில்லறை விற்பனைபடி, சமன்படுத்தப்பட்ட பால் (1000மிலி TM) தற்போதைய விலை ரூ.43 லிருந்து ரூ.40 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் (500மிலி TM) ரூ.21.50 லிருந்து ரூ.20 ஆகவும், நிலப்படுத்தப்பட்ட பால் (500மிலி SM) ரூ.23.50 லிருந்து ரூ.22 ஆகவும், நிறை கொழுப்பு பால் (500மிலி FCM) ரூ.25.50 லிருந்து ரூ.24 ஆகவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (500மிலி DTM) ரூ.20 லிருந்து ரூ.18.50 ஆகவும், டீமேட் (1000 மிலி) ரூ.60 லிருந்து ரூ.57 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பால் அட்டை விற்பனைப்படி, சமன்படுத்தப்பட்ட பால் (1000மிலி TM) தற்போதைய விலை ரூ.40 லிருந்து ரூ.37 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் (500மிலி TM) ரூ.20 லிருந்து ரூ.18.50 ஆகவும், நிலப்படுத்தப்பட்ட பால் (500மிலி SM) ரூ.22.50 லிருந்து ரூ.21 ஆகவும், நிறை கொழுப்பு பால் (500மிலி FCM) ரூ.24.50 லிருந்து ரூ.23 ஆகவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (500மிலி DTM) ரூ.19.50 லிருந்து ரூ.18 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025