அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..! சிறந்த காளைக்கு முதல்வர் சார்பில் கார் பரிசு..!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்புப் பரிசாக தமிழக முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு கார் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த போட்டி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மூர்த்தி அவர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்புப் பரிசாக தமிழக முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு கார் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு பைக் வழங்கப்படுகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டு உரிமையாளர்களுக்கும் அதிக அளவில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025