உஷார்.! கார் வாடகைக்கு விடுபவரா நீங்கள்.? நூதன திருட்டு அம்பலம்.!

Default Image

சென்னையில் தனியார் செயலி மூலம் வாடகைக்கு காரை எடுத்து அதனை திருடி, திருநெல்வேலியில் விற்று வந்த கும்பலை தனிப்படை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். 

சென்னை ஆவடியை சேர்ந்த கிருத்திகா என்பவர், தனியார் செயலி மூலம் தனது காரை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்துள்ளார். அந்த தனியார் செயலி மூலம் புவனன் குப்தா எனும் பெயரில் கடந்த 8ஆம் தேதி ஒருவர் காரை புக் செய்து, 10ஆம் தேதி ஓட்டுநர் உரிமம் கொடுத்து காரை ஒருநாள் வாடகைக்காக எடுத்து சென்றுள்ளார்.

5 நாள்கள் ஆகியும் கார் வரவில்லை. ஜிபிஎஸ் செயல் இழக்கப்பட்டு விட்டது. காரை புக் செய்தவர் போன் சுவிட்ச் ஆகிவிட்டது. இதனை அடுத்து ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது தான் இதே போல ஒரு கார் திருட்டு புகார் கடந்த ஏப்ரலில் பதியப்பட்டது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஆவடி ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைந்து இந்த நூதன திருட்டில் ஈடுப்பட்டவர்களை பிடிக்க ரகசிய விசாரணை நடைபெற்று வந்துள்ளது.

இதனை தொடர்ந்து, திருநெல்வேலியில் இந்த திருட்டு கும்பல் இருப்பதை கண்டறிந்து , திருநெல்வேலி சமாதானபுரம் பகுதியில் திருட்டு கும்பலை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரித்தத்தில்,  புவனன் குப்தா எனும் போலி பெயர் , போலி ஓட்டுநர் உரிமம் கொடுத்து காரை புக் செய்த்து திருமங்கலத்தை சேர்ந்த அரவிந்தன் என்பதும் அவருக்கு உடந்தையாக திருநெல்வேலியை சேர்ந்த முத்துராமலிங்கம் மற்றும் அருணாச்சல பாண்டி ஆகியோர் செயல்பட்டதும் தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து, 2 கார்களை போலீசார் கைப்பற்றினர். இதே போல பல்வேறு கார்களை திருடி, அதனை திருநெல்வேலியில் திருட்டுத்தனமாக விற்றதும் தெரியவந்துள்ளளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்