திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1-க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம்!

Published by
லீனா

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1-க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம்.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை, 8ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க,  பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல், மக்கள் வெளியில் வரும் போது, கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் முதல்முறையாக முககவச தானியங்கி எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் நேற்று தொடங்கி வைத்தார். ரூ.1 நாணயத்தை இந்த எந்திரத்தில் செலுத்தினால் ஒரு முககவசம் கிடைக்கும். இதுபோன்று தூத்துக்குடியில், ரூ.5-க்கு முககவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து ஆணையாளர் சிவகுமார் கூறும்போது, “அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரூ.1 நாணயத்தை செலுத்தி ஒரு முககவசத்தை பெறும் தானியங்கி எந்திரம் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தரமான முககவசத்தை ரூ.1-க்கு வழங்குகிறோம். இதைத்தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுபோன்ற முககவச தானியங்கி எந்திரம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார். 

Published by
லீனா

Recent Posts

RCB vs GT : பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்! போராடி 170 டார்கெட் வைத்த பெங்களூரு! 

RCB vs GT : பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்! போராடி 170 டார்கெட் வைத்த பெங்களூரு!

பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

8 hours ago

RCB vs GT : இதுவா பெங்களூரு மைதானம்? கதறும் RCB வீரர்கள்.. அடுத்தடுத்த அவுட்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…

9 hours ago

RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

10 hours ago

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

11 hours ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

12 hours ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

12 hours ago