திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1-க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம்!

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1-க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை, 8ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல், மக்கள் வெளியில் வரும் போது, கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் முதல்முறையாக முககவச தானியங்கி எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் நேற்று தொடங்கி வைத்தார். ரூ.1 நாணயத்தை இந்த எந்திரத்தில் செலுத்தினால் ஒரு முககவசம் கிடைக்கும். இதுபோன்று தூத்துக்குடியில், ரூ.5-க்கு முககவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆணையாளர் சிவகுமார் கூறும்போது, “அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரூ.1 நாணயத்தை செலுத்தி ஒரு முககவசத்தை பெறும் தானியங்கி எந்திரம் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தரமான முககவசத்தை ரூ.1-க்கு வழங்குகிறோம். இதைத்தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுபோன்ற முககவச தானியங்கி எந்திரம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025