ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்.! 1,620 கோடியில் அதிநவீன சிக்னல்.!
சென்னையில் ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் வண்ணம் தானியங்கி மெட்ரோ ரயில் இயக்கபட உள்ளது.
சென்னை மெட்ரோ நிர்வாகம் தற்போது புதிய வசதியை அறிமுகப்படுத்தி அதற்கான ஒப்பந்தத்தை போட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் வண்ணம் தானியங்கி மெட்ரோ ரயில் இயக்கபட உள்ளது.
இதற்கான அதிநவீன சிக்னல் அமைக்க மட்டும் 1,620 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதன் மூலம் 1 நிமிடம் 30 வினாடிகள் இடைவெளியில் மெட்ரோ ரயிலை இயக்க முடியும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.