டிரைவர் இல்லாமல் ஓடிய ஆட்டோ.! அடுத்து என்ன நடந்தது.!
சென்னை தாம்பரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ் என்பவர், ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோவில் இருந்து திடிரென பிரகாஷ் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆட்டோ, ட்ரைவர் மற்றும் பயணிகள் யாரும் இல்லாமல் சிறிது தூரம் சென்று தடுப்பில் மோதி நின்றுள்ளது.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் விரைந்து வந்த காவல்துறையினர் ஆட்டோ டிரைவரை பரிசோதித்த போது அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ சோதனையில் அவர் மாரடைப்பால் இறந்துள்ளார் என தெரிவித்தனர். இந்த நிலையில் டிரைவர் இல்லாமல் ஆட்டோ ஓடிய நிகழ்வு, பின்னர் ட்ரைவர் உயிரிழப்பு போன்ற சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு அங்குள்ள சிசிடிவி கட்சியில் பதிவாகியுள்ளது.