போக்சோ நீதிமன்றம் ஆசிரியர் ராஜகோபாலன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைந்ததுள்ளனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ராஜகோபாலன் தரப்பில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஜாமீன் மனுவை விசாரித்த போக்சோ நீதிமன்றம் ராஜகோபாலன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. பின்னர், ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆசிரிய ராஜகோபாலன் மீது இதுவரை 5 பேர் பாலியல் புகாரை காவல்துறையில் நேரடியாக கொடுத்துள்ளனர்.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…