ஆக.20ல் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் – ஓபிஎஸ் அறிவிப்பு!

OPanneerselvam

சென்னையில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம்  அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 20-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி, சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ ஆடிட்டோரியத்தில் ஆக.20-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.  ஓ.அபன்னீர்செல்வம் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 20-ஆம் தேதி மதுரையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாநாடு நடைபெற உள்ள நிலையில், ஓபிஎஸ் அவரது அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்