ஆகஸ்ட் 2 – நடிகர் விஷால் நேரில் ஆஜராக வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
வருமானவரி பிடித்தம் தொகை தாக்கல் செய்யாத வழக்கில் நடிகர் விஷால் ஆகஸ்ட் 2 ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் விஷாலுக்கு சொந்தமாக விஷால் பிலிம் பெக்டரி ( VFF ) தயாரிப்பு நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரியம் ஊழியர்களின் வருமானத்தில் பிடித்தம் செய்த தொகையை வருமான வரி கணக்கில் தாக்கல் செய்யவில்லை என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. இதற்காக வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் இருக்கும் சூழலில், வரும் ஆகஸ்ட் 2 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.