மாணவர் விடுதிக்கு பதில் ஆடிட்டோரியம் தர தயார்- அண்ணா பல்கலைக்கழகம்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் அதிகமாக சென்னையில் தான் பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் , கொரோனா மருத்துவ முகாம் அமைக்க குறிப்பிட்ட காலத்திற்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்படைக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு நேற்று சென்னை மாநகராட்சி கடிதம் அனுப்பியது. இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்காக மாணவர் விடுதிக்கு பதில் ஆடிட்டோரியத்தை சென்னை மாநகராட்சிக்கு தர தயார் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.