பிரியா மரணம்.! அறுவை சிகிச்சைக்கு தணிக்கை.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி.!
ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போன்ற அறுவை சிகிச்சையை தணிக்கை தமிழகத்தில் செய்யப்பட இருக்கிறது. – அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.
சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் வருடாந்திர தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. அதில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது, வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக பேசினார். அதில் ,
பிரியாவுக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்பட கூடாது. அந்த தவறு தவறு இனி நடக்காமல் இருக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 23ம் தேதி மருத்துவ நிபுணர்களை அழைத்து ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போன்ற அறுவை சிகிச்சையை தணிக்கை செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் இதுவே முதல் முறை என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.