அத்திக்கடவு அவிநாசி திட்டம் நடப்பாண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்.! முதல்வர் பேச்சு.!
- தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத்தில் பேசிய துரைமுருகன், அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ஒவ்வொறு ஆண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும். அதற்கு தற்போது தான் அடிக்கல் நாட்டப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு பேசினார்.
தமிழக படஜெட் தங்களுக்கு பிறகு கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு திட்டங்கள் குறித்து முதல்வர் அறிவித்தார். பின்னர் சில திட்டங்களை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி விவாதித்தனர். அப்போது பட்ஜெட் மீதான விவாத்தில் பேசிய துரைமுருகன், அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ஒவ்வொறு ஆண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும். அதற்கு தற்போது தான் அடிக்கல் நாட்டப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு பேசினார்.
இதையடுத்து இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு, நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் விடப்பட்டு மற்றும் அடிக்கல் நாட்டப்பட்டு, திட்டப் பணிகள் துரிதமாக நடைப்பெற்று வருவதாக தெரிவித்தார். இதனிடையே சமீபத்தில் நடந்த தமிழக படஜெட் தாக்கலில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் என குறிப்பிடத்தக்கது.