இளைஞர்கள் கவனத்திற்கு: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு..!

Default Image

தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் வேலைவாய்ப்புமுகாம் நடைபெறவுள்ளது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) DDU-GKY திட்டத்தின் கீழ் நடத்தும் வேலையற்ற ஆண், பெண் இருபாலருக்கும் (இளைஞர்களுக்கு) பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 04.12.2021 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை மொரப்பூர் இந்து அறநிலையத்துறை திருமண மண்டபத்தில் நடைபெறும் சமய வேலைவாய்ப்பு முகாமிற்கு தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய, படிக்காத மற்றும் 8-ஆம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டம் B.E படித்த வேலையில்லா இளைஞர்கள் (ஆண்,பொண் இருபாலரும் ) இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

GO

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்