கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கவனத்திற்கு..! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் என்று, தமிழக பொது சுகாதார திட்டத்தில் திருத்தம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 வருடமாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மெகா தடுப்பூசி முகாம் மற்றும் வீடு தேடி தடுப்பூசி போடும் திட்டம் மூலம் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் என்று, தமிழக பொது சுகாதார திட்டத்தில் திருத்தம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்களா என பள்ளி, கல்லூரி, கடைகள் மற்றும் சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திரையரங்குகள், பூங்காக்கள், மக்கள் கூடும் இடங்களில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்களா என சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.