மாணவர்கள் கவனத்திற்கு..! இன்று முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம்..!
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் நேற்று காலை, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூலகத்தில் வெளியிட்டிருந்தார்.
பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி எனவும், அதில் மாணவிகள் 96.38% பேரும், மாணவர்கள் 91.45% பேரும் தேர்ச்சி என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மு விடைத்தாள் நகல் பெற ரூ.275, மறுகூட்டலுக்கு ரூ.205, உயிரியல் பாடத்திற்கு மட்டும் 5305 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.